search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராஜராஜேஸ்வரி
    X
    ராஜராஜேஸ்வரி

    கல்லுநாட்டி ராஜராஜேஸ்வரி கோவில் திருவிழா

    கருங்கல் அருகே கீழ்குளம், கல்லுநாட்டி உதயகிரிசாஸ்தா ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்கி 22-ந் தேதி வரை நடக்கிறது.
    கருங்கல் அருகே கீழ்குளம், கல்லுநாட்டி உதயகிரிசாஸ்தா ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்கி 22-ந் தேதி வரை நடக்கிறது. இன்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8 மணிக்கு கொடியேற்றம், சிறப்பு பூஜை, தீபாராதனை, அகண்டநாம ஜெபம், மாலை 6.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, போன்றவை நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு பண்பாட்டு போட்டிகள், மாலை 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, 8 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடைபெறும்.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை, பஜனை, திருவிளக்கு பூஜை, அன்னதானம், பால்குட ஊர்வலம், பால் அபிஷேகம் போன்றவை நடைபெறும். விழாவின் இறுதி நாளான 22-ந் தேதி மாலை 4 மணிக்கு 108 பொங்கல் வழிபாடு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
    Next Story
    ×