
நேற்று தை கடைசிவெள்ளி என்பதால், வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்து கலந்து கொண்டனர். அம்மனுக்கு பகலில் அபிஷேக ஆராதனையும், அதனைத்தொடர்ந்து கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மாலையில் சந்தனகாப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் இரவு 7 மணிக்கு, விஷேச மேள கச்சேரியுடன் அன்ன வாகனத்தில் அம்மன் வீதியுலா செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ் உத்தரவின் பேரில், அறங்காவலர் குழு தலைவர் கேசவன், துனைத்தலைவர் ஆறுமுகம், செயலாளர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் மற்றும் கோவில் நிர்வாகிகள், ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.