search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
    X
    சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

    சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

    சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற அனந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 7-ம் ஆண்டு கும்பாபிஷேக தினத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
    சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற அனந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 7-ம் ஆண்டு கும்பாபிஷேக தினத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்படி சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.

    பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பாண்டியன் எம்.எல்.ஏ., குமராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பூங்குழலி பாண்டியன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×