
இதையொட்டி செம்புலிங்க அய்யனார் மற்றம் முதுகுன்றீஸ்வரருக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் கோவிலுக்கு அருகில் உள்ள ஏரியில் எழுந்தருளினர். தொடர்ந்து அங்கு சாமிகளுக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் முதனை மற்றம் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து நேற்று சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெற்றது. இன்று(சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் முத்து ராஜா, ஆய்வாளர் லட்சுமி நாராயணன், ஊராட்சி மன்ற தலைவர் செல்வராசு உள்பட பலர் செய்து வருகின்றனர்.