
நாமக்கல் பலபட்டரை மாரியம்மன் கோவில் இருந்து செல்லாண்டியம்மன் கோவிலுக்கு பால்குடங்களை பெண்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அதைத்தொடர்ந்து நேற்று மாலை காவடி பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் இன்று (சனிக்கிழமை) மாலை இடும்பன் பூஜை நடைபெற உள்ளதாக விழாக்குழுவினர் தெரிவித்தனர்.