
விழாவின் நிறைவு நாளான நேற்று அய்யா வைகுண்டசாமிக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, மதியம் 12 மணிக்கு உச்சி படிப்பும், மாலை 5 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு தொடக்க நிகழ்ச்சி போன்றவை நடைபெற்றது. திருஏடு வாசிப்பு நிகழ்ச்சியை பாலபிரஜாபதி அடிகளார் தொடங்கி வைத்து விளக்கவுரை ஆற்றினார். இரவு 10 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நிறைவுபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் இனிமம் வழங்கப்பட்டது. பட்டாபிஷேக விழாவை முன்னிட்டு தலைமைப்பதி முழுவதும் வாழை மற்றும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் பல மாவட்டங்களை சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.