search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தென்தாமரைகுளம் பெரியம்மன் கோவில் மார்கழி கொடை விழா
    X
    தென்தாமரைகுளம் பெரியம்மன் கோவில் மார்கழி கொடை விழா

    தென்தாமரைகுளம் பெரியம்மன் கோவில் மார்கழி கொடை விழா

    தென்தாமரைகுளம் இந்து நாடார் சமுதாயத்துக்கு உட்பட்ட பெரியம்மன் கோவில் மார்கழி கொடைவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.
    தென்தாமரைகுளம் இந்து நாடார் சமுதாயத்துக்கு உட்பட்ட பெரியம்மன் கோவில் மார்கழி கொடைவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.

    விழாவில் இன்று மாலை 6 மணிக்கு உதயகால பூஜை, இரவு 9 மணிக்கு வில்லிசை, 10 மணிக்கு சக்தி விநாயகருக்கு பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு பெரியம்மனுக்கு சிறப்பு பூஜை, 2 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கோவில் வலம் வருதலும் நடைபெறுகிறது. நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு அனந்த சயனருக்கு பூஜை, 12 மணிக்கு சமபந்தி விருந்து, தொடர்ந்து மாரியம்மன் மற்றும் வெள்ளை மாரியம்மனுக்கு பூஜை, மதியம் 3 மணிக்கு அம்மன் கோவில் வலம் வருதலும், மாலை 5 மணிக்கு கருங்கிடாகார சுவாமிக்கு பூஜை, மாலை 6 மணிக்கு தோட்டுக்காரி அம்மனுக்கு பூஜை, இரவு 7 மணிக்கு காவல் தெய்வங்களுக்கு பூஜையும் நடைபெறுகிறது.
    Next Story
    ×