search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அர்த்தநாரீஸ்வரர்
    X
    அர்த்தநாரீஸ்வரர்

    அர்த்தநாரீஸ்வரர் தத்துவம்

    அர்த்தநாரீஸ்வரர் என்பது ஆண்பாதி, பெண்பாதி என உடலில் இரண்டு பாகங்களையும் குறிக்கும் கடவுளாக விளங்குகிறார். இதற்கு ஒரு புராண கதை உண்டு.
    திருவண்ணாமலை கார்த்திகை தீபவிழாவின் பத்தாம் நாள் மலை மீது மகாதீபம் ஏற்றப்படும் போது கோவில் வளாகத்தில் தீபதரிசன மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருள்வார்கள். சரியாக மாலை 6 மணியளவில் கோவில் உட்பிரகாரத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி ஒரு நிமிடம் பக்தர்களுக்கு தரிசனம் தருவார். அந்த நேரத்தில் மலை மீது மகாதீபம் ஏற்றப்படும்.

    அர்த்தநாரீஸ்வரர் என்பது ஆண்பாதி, பெண்பாதி என உடலில் இரண்டு பாகங்களையும் குறிக்கும் கடவுளாக விளங்குகிறார். இதற்கு ஒரு புராண கதை உண்டு. பிருங்கி மகரிஷி சிவனை மட்டுமே வழிபட்டு வந்தார். பார்வதி தேவியை கூட வழிபடவில்லை. இதனால் கோபம் உண்டான அம்பாள் இறைவனுடன் சேர்ந்து அமர்ந்திருந்தாள். அப்போது பிருங்கி முனிவர் வண்டு உருவம் கொண்டு இறைவனை மட்டும் சுற்றி வழிப்பட்டார். இதனால் கோபமுற்ற அம்பாள் கடும் தவம்புரிந்து இறைவன் உடலில் ஒரு பாதி இடம் பெற்றாள். இந்த நாளை நினைவூட்டுவதாகத்தான் தீபவிழா கொண்டாடப்படுவதாக சில புராண நூல்கள் கூறுகிறது.

    விஞ்ஞான ரீதியாக உயிர்கள் தோன்ற 36 குரோமோசோம்கள் தேவை. பெண் உயிர் தோன்ற 36 எக்ஸ், எக்ஸ் குரோமோ சோம்களும், ஆண் உயிர்கள் தோன்ற எக்ஸ், ஒய் குரோமோ சோம்களும் தேவைப்படுகிறது. விஞ்ஞான விதிகளின்படி அனைத்து ஆண்களும், பெண்தன்மை உள்ளவர்களே. உயிர் தோற்றத்திற்கு காரணமான இறைவன் மட்டுமே ஆண் தன்மை உடையவன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
    Next Story
    ×