search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சாமிதோப்பு
    X
    சாமிதோப்பு

    சாமிதோப்பு வைகுண்டசாமி தலைமைபதியில் ஏடு வாசிப்பு விழா 4-ந் தேதி தொடங்குகிறது

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைபதியில் கார்த்திகை ஏடு வாசிப்பு திருவிழா வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது.
    சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமை பதி உள்ளது. இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் அய்யா வைகுண்டசாமி தன்னுடைய சீடர்களுக்கும், பக்தர்களுக்கும் கூறிய அறிவுரைகளை திருஏடாக வாசிப்பது வழக்கம். இந்த விழா 17 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஏடு வாசிப்பு விழா வருகிற 4-ந் தேதி மாலை தொடங்குகிறது.

    விழாவின் முதல்நாள் மாலை 4 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, சாமிதோப்பு அரி கோபாலன் சீடர் இல்லத்தில் இருந்து மேளதாளத்துடன் தலைமைப்பதிக்கு மூலப்பத்திரம் கொண்டு வரும் நிகழ்ச்சி, ஏடு வாசிப்பு ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் இரவு தலைமை பதியின் உள்பகுதியில் வாகன பவனியும், அன்னதானமும் நடக்கிறது. வருகிற 18-ந் தேதி திருக்கல்யாண ஏடு வாசிப்பு நடக்கிறது. அய்யா வைகுண்டசாமி ஏழு அம்மைமாரை திருக்கல்யாணம் செய்யும் ஏடு வாசிப்பு நடக்கிறது. அன்றையதினம் அய்யா வைகுண்டசாமிக்கு கல்யாண சீர் வரிசையாக பல்வேறு வகையான சீர்வரிசை பொருட்களை பக்தர்கள் வழங்கி வழிபடுகின்றனர்.

    20-ந் தேதி ஏடு வாசிப்பின் நிறைவு நாள் விழாவாக அய்யா வைகுண்டசாமிக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, இரவு 7 மணிக்கு பட்டாபிஷேக ஏடு வாசிப்பு, தொடர்ந்து பக்தர்களுக்கு இனிமம் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.
    Next Story
    ×