search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பஞ்சலிங்கங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்திய போது எடுத்த படம்.
    X
    பஞ்சலிங்கங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்திய போது எடுத்த படம்.

    சிறுமுகை அருகே பஞ்சலிங்கங்களுக்கு கும்பாபிஷேகம்

    மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே உள்ள பஞ்சலிங்கங்கள் மற்றும் பாதாள லிங்கத்திற்கு புனித நீர் ஊற்றி சாந்தலிங்க மருதாசல அடிகளார் கும்பாபிஷேகம் செய்து வைத்தார்.
    மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையை அடுத்த கிச்சகத்தியூரில் ஸ்ரீ விருட்ச பீடம் உள்ளது. இங்கு 27 நட்சத்திரங்களுக்கும் உண்டான சித்தர் தெய்வ உருவ சிலைகளும், பஞ்ச லிங்கங்கள் மற்றும் பாதாள லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு திருப்பணிகள் நிறைவடைந்தது. இதையொட்டி கும்பாபிஷேகம் கடந்த 24-ந் தேதி கணபதி வழிபாட்டுடன் தொடங்கியது. 

    நேற்று அதிகாலை 5 மணிக்கு கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கியது. இதில், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் சாக்த ஸ்ரீ லட்சுமி தாச சுவாமிகள் முன்னிலையில் சிவநெறி தொண்டர்கள் சக்திவேல், குழந்தைவேல், சந்திரசேகர், திருஞானசம்பந்தம் உள்பட பலர் யாகசாலை பூஜையை நடத்தினர். 

    பின்னர் 4-ம் கால வேள்வி பூஜை, வேள்வி சாலையில் இருந்து மூல மூர்த்திக்கு அருள்நிலை ஏற்றுதல், மலர் வழிபாடு ஆகியவை நடைபெற்றன. காலை 7.35 மணிக்கு மேல் யாகசாலையில் இருந்து புனித நீர் குடங்கள் நாதஸ்வரம், மேளதாளம் முழங்க கோவிலை வலம் வந்தது. பஞ்சலிங்கங்கள் மற்றும் பாதாள லிங்கத்திற்கு புனித நீர் ஊற்றி சாந்தலிங்க மருதாசல அடிகளார் கும்பாபிஷேகம் செய்து வைத்தார். காலை 9.30 மணிக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை, மகாதீபாராதனை நடைபெற்றது.
    Next Story
    ×