search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதம்
    X
    சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதம்

    விரைவுத் தபாலில் சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதம்: தபால் துறை நடவடிக்கை

    இந்திய தபால் துறை, திருவாங்கூர் தேவஸ்வம் வாரியத்துடன் இணைந்து சபரிமலை கோவில் பிரசாதத்தை நாடு முழுவதும் உள்ள பக்தர்களுக்கு முன்பதிவு செய்வதற்கும் மற்றும் விரைவுத் தபால் மூலம் அவர்களின் வீட்டு வாசலில் வழங்குவதற்கான ஒப்பந்தம் செய்துள்ளது.
    சென்னை :

    ஒரு பாக்கெட் சாமி பிரசாதத்தில் அரவணைப் பாயாசம், நெய், மஞ்சள், குங்குமம், விபூதி மற்றும் அர்ச்சனை பிரசாதம் ஆகியவை உள்ளது. ஒரு பிரசாதப் பை ரூ.450. இந்த பொருட்கள் அட்டைப்பெட்டியில் அடைத்து விரைவுத் தபால் மூலம் பக்தர்களுக்கு அனுப்பப்படும். 

    தேவைப்படும் பக்தர்கள் எந்த தபால் நிலையத்திலும் ரூ.450 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். ஒரு ரசீதின் கீழ் பத்து பாக்கெட்டுகளை பதிவு செய்யலாம். ஒரு பக்தர் எத்தனை பாக்கெட்டுகளை வேண்டுமானாலும் முன்பதிவு செய்யலாம்.

    மேற்கண்ட தகவலை தமிழ்நாடு முதன்மை தபால் துறை தலைவர் செல்வகுமார் தெரிவித்து உள்ளார்.
    Next Story
    ×