
தொடர்ந்து விநாயகர், ராஜராஜேஸ்வரர், ராஜராஜேஸ்வரி, தண்டாயுதபாணி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து சி.என்.பாளையம் சொக்கநாதன் பேட்டையில் இருந்து சாமிக்கு சீர்வரிசை பொருட்கள் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் எழுந்தருளினார். அப்போது சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சமூக இடைவெளியுடன் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.