search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முத்தாரம்மன்
    X
    முத்தாரம்மன்

    குஞ்சன்விளை முத்தாரம்மன் கோவில் கொடை விழா 23-ந் தேதி தொடங்குகிறது

    நாகர்கோவில் அருகே குஞ்சன்விளை முத்தாரம்மன் கோவிலில் கார்த்திகை மாத கொடை விழா வருகிற 23-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் அருகே குஞ்சன்விளை முத்தாரம்மன் கோவிலில் கார்த்திகை மாத கொடை விழா வருகிற 23-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாள் காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், மதியம் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனை, 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை போன்றவை நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை, நையாண்டி மேளம், வில்லிசை போன்றவை நடைபெறும். 25-ந் தேதி மதியம் 1 மணிக்கு பொங்கல் வழிபாடு, நள்ளிரவு 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் அம்பாள் பவனி வருதல் போன்றவை நடக்கிறது. விழாவின் இறுதி நாளான 26-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு வில்லிசை நடக்கிறது.

    பின்பு காலசாமி மற்றும் சிவ சுடலை மாடன் சாமிக்கு தீபாராதனை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை ஊர் நிர்வாக கமிட்டி தலைவர் ராஜகோபால் என்கிற முத்து, செயலாளர் சுயம்பு, சட்ட ஆலோசகர் பெறி மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×