search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெரிய சோரகை சென்றாய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
    X
    பெரிய சோரகை சென்றாய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

    பெரிய சோரகை சென்றாய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

    நங்கவள்ளி அருகே பெரியசோரகை சென்றாய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
    சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே பெரியசோரகையில் சென்றாய பெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி ரூ.71 லட்சம் மதிப்பீட்டில் கோவிலில் மகா மண்டபம், திருமதில், கொடிமரம், ஆஞ்சநேயர் சன்னதி, திருமடப்பள்ளி மற்றும் சுற்றுப் பிரகார தரைத்தளம் புனரமைக்கப்பட்டது.

    தொடர்ந்து திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று காலை சென்றாய பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. து சுதர்சன பட்டாச்சாரியார் தலைமையில் பல்வேறு ஊர்களில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் தீர்த்தம் கோவில் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    இந்த கும்பாபிஷேக விழாவிற்காக கோவில் கோபுரத்தின் மேல் பகுதியில் சிறிய மேடை அமைக்கப்பட்டு இருந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், கே.பி.அன்பழகன் ஆகியோர் அங்கு சென்று சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர்.

    பின்னர் கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புனிதநீர் ஊற்றப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

    விழாவில் தாரமங்கலம், வனவாசி, மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
    Next Story
    ×