search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கிருஷ்ணன்
    X
    கிருஷ்ணன்

    முனிவர்களின் கோரிக்கையை ஏற்று கண்ணன் குடியமர்ந்த ‘திருக்கண்ணங்குடி’

    வசிஷ்டருக்கும், மற்ற முனிவர்களின் கோரிக்கையை ஏற்று கண்ணன் குடியமர்ந்த இடம், ‘கண்ணன்குடி’ என்று பெயர் பெற்றது. அதுவே மருவி தற்போது ‘திருக்கண்ணங்குடி’ என்று வழங்கப்படுகிறது.
    நாகப்பட்டினத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ளது ஆழியூர் பள்ளிவாசல். இங்கிருந்து தெற்கே 2 கிலோமீட்டர் சென்றால் திருக்கண்ணங்குடியை அடையலாம். இங்கு லோகநாதப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள ஸ்ரீதேவி-பூதேவி உடனாய லோகநாதர், நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். தாயார் லோகநாயகி என்ற பெயரில் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறாள். உற்சவர்கள் தாமோதர நாராயணன், அரவிந்தநாயகி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள்.

    முன் காலத்தில் வனமாக இருந்த இந்தப் பகுதிக்கு வந்த வசிஷ்ட முனிவர், வெண்ணெயில் கிருஷ்ணரை செய்து வழிபட்டார். அந்த பக்தியில் மயங்கிய கண்ணன், வெண்ணெயில் இருந்து சிறுவனாக வெளிப்பட்டார். பின்னர் வசிஷ்டருக்கும், மற்ற முனிவர்களுக்கும் காட்சி கொடுத்தார். இங்கேயே நிரந்தரமாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்ற முனிவர்களின் கோரிக்கையை ஏற்று கண்ணன் குடியமர்ந்த இடம், ‘கண்ணன்குடி’ என்று பெயர் பெற்றது. அதுவே மருவி தற்போது ‘திருக்கண்ணங்குடி’ என்று வழங்கப்படுகிறது.
    Next Story
    ×