search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புதிதாக உருவாக்கப்பட்ட பெரிய மரத்தேர் வெள்ளோட்டத்திற்கு தயார் நிலையில் உள்ளதை படத்தில் காணலாம்.
    X
    புதிதாக உருவாக்கப்பட்ட பெரிய மரத்தேர் வெள்ளோட்டத்திற்கு தயார் நிலையில் உள்ளதை படத்தில் காணலாம்.

    ஆரணிகோட்டை கைலாசநாதர் கோவிலில் தேர் வெள்ளோட்டம் எப்போது என பக்தர்கள் எதிர்பார்ப்பு

    ஆரணி கோட்டை கைலாசநாதர் கோவிலில் புதிய மரத்தேர் தயார் நிலையில் உள்ளது. வெள்ளோட்டம் எப்போது நடைபெறும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    ஆரணி கோட்டை மைதானம் அருகே அறம்வளர்த்த நாயகி உடனுறை கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் இருந்த பெரிய மரத்தேர் கடந்த 2012-ம் ஆண்டு தேரோட்டத்தின் போது தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி சிதலமடைந்தது.

    இதனைத்தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை சார்பாக ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய மரத்தேர் அமைக்க உத்தரவிடப்பட்டது. அப்பணியும் முடிக்கப்பட்டு விட்டன.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1-ந் தேதி வெள்ளோட்டம் நடத்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், இணை ஆணையர் உத்தரவின்பேரில் தயார் நிலையில் இருந்தது. அப்போது தேர் வெள்ளோட்டம் செல்லும் பாதைகளான வடக்கு மாடவீதி, பெரிய கடைவீதி பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருந்தது. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றினால்தான் தேர் வெள்ளோட்டம் நடத்த முடியும் என்றும், சித்திரை மாதம் தேரோட்டம் நடத்தலாம் என முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதிக்கு பிறகு கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகளால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தற்போது அரசு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    ஆக்கிரமிப்பில் இருந்த சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் ஆரணி நகராட்சி மூலமாக ரூ.26½ லட்சம் மதிப்பில் பக்க கால்வாய், தாய் சாலையும் அமைக்கப்பட்டு தயாராக உள்ளது.

    இந்த நிலையில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய பெரிய மரத்தேர் வெள்ளோட்டம் எப்போது நடைபெறும் என்று பக்தர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.
    Next Story
    ×