search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வீட்டில் மகாலட்சுமி பூஜை
    X
    வீட்டில் மகாலட்சுமி பூஜை

    லட்சுமியின் 12 பெயரும், வழிபட்டால் கிடைக்கும் பலனும்

    மகாலட்சுமியின் 12 பெயர்களையும், மகாலட்சுமியை வழிபட்டால் கிடைக்கும் பலன்களையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    1. ஸ்ரீதேவி
    2. அம்ருதோத்பவா
    3. கமலப்ரோக்தா
    4. சந்திரசோதரா
    5. விஷ்ணுபத்னி
    6. விஷ்ணுவல்லபா
    7. ஹரிவல்லபா
    8. சாரங்கிணப்ரோக்தா
    9. தேவதேவிகா
    10. மகாதேவி
    11. லோகதேவி
    12. வித்யா

    தேர்கள் லட்சுமியின் வடிவமாக கருதப் படுகிறது. இதனால்தான் தேர் திருவிழா நாளில், தேர் சக்கரங்களில் சிதறுகாய் விட்டு வழிபடுகிறார்கள். இந்த வழிபாட்டால், வாகன வசதி, வாகன விபத்து பயம் நீங்கும்.

    சுமங்கலி பெண்களை வாழ்த்தி வணங்கினால் கிரஹலட்சுமியின் அருள் கிட்டும்.

    குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள், ஐஸ்வரிய மகாலட்சுமியை குல தெய்வமாக வணங்கலாம்.

    பனை ஓலை பெட்டிகளில் இனிப்பு வைத்து தானம் அளித்தால் ஆயுள் பெருகி நோய்,நொடி விலகும். எமபயம் நீங்கும்.
    Next Story
    ×