search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருக்கண்ணபுரம் நீலமேகப் பெருமாள்,
    X
    திருக்கண்ணபுரம் நீலமேகப் பெருமாள்,

    திருக்கண்ணபுரம் நீலமேகப் பெருமாள்,

    திருக்கண்ணபுரம் கோவிலில் திருமால் நீலமேகப் பெருமாள், சௌரிராஜப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் கண்ணபுரநாயகி என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள்.
    திருக்கண்ணபுரம் இங்கு திருமால் எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாக கையில் முழுவதும் திரும்பிய பிரயோகச் சக்கரத்துடன் காட்சியளிக்கிறார். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இத்தலம் கீழைவீடு என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது. வைகாசி பிரம்மோற்சவ விழவாவின் போது காலையில் சிவன், மாலையில் பிரம்மா, இரவில் திருமால் என மும்மூர்த்தி வடிவில் அருளுவது இத்தலச் சிறப்பாகும். இராமர் இத்தலத்தில் விபீசணனுக்கு திருமால் வடிவில் நடந்து காட்டியதாகக் கூறப்படுகிறது. இன்றைக்கும் அமாவாசை அன்று விபீசணனுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது.

    இக்கோவிலில் மூலவரை நோக்கி ஒரே வட்டத்தில் நவகிரகங்கள் காட்சியளிக்கின்றன. இத்தலம் இறைவன் வைகுந்த பதவியை வழங்குபவராகப் போற்றப்படுகிறார். இத்தல இறைவனை வழிபட அனைத்து நியாயமான கோரிக்கைகளும் நிறைவேறும். இங்கு திருமால் நீலமேகப் பெருமாள், சௌரிராஜப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் கண்ணபுரநாயகி என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள். நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார் ஆகியோர் இத்தல இறைவனை மங்களாசனம் செய்துள்ளனர்.
    Next Story
    ×