
19-ந்தேதி இரவு அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். 20-ந்தேதி காலை கிருஷ்ண அவதாரம், அன்று இரவு சிம்மவாகனத்தில் பெருமாள் புறப்பாடு நடைபெறும். 21-ந்தேதி காலை ராம அவதாரம், இரவு அனுமார் வாகன புறப்பாடு, 22-ந் தேதி காலை கஜேந்திர மோட்சம், இரவு கருட வாகன புறப்பாடு, 23-ந்தேதி காலையில் ராஜாங்க சேவை, இரவு சேஷ வாகனத்தில் புறப்பாடு நடைபெறுகிறது.
26-ந்தேதி காலையில் வெண்ணை தாழியும், 27-ந் தேதி காலையில் திருத்தேர், அன்றிரவு பூப்பல்லக்கு விழா, 28-ந் தேதி காலையில் தீர்த்தவாரி, இரவு பூச்சப்பரம் நடைபெறும். 29-ந்தேதி காலையிலும், மாலையிலும் தெப்ப உற்சவமும், 30-ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவிலின் உள் பிரகாரத்திலேயே அரசு வழிகாட்டுதல்படி நடைபெறும். பக்தர்கள் கூட்டமாக வராமல் வரிசையாக வரவேண்டும். முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.