search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கூடலழகர் பெருமாள் கோவிவில் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.
    X
    கூடலழகர் பெருமாள் கோவிவில் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.

    மீனாட்சி அம்மன் கோவிலை சுத்தம் செய்த பணியாளர்கள்

    பல மாதங்களுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட உள்ளதால் கோவில்களை சுத்தம் செய்யும் பணி நடந்தது. மீனாட்சி அம்மன் கோவிலில் அனைத்து இடங்களையும் தண்ணீரை கொண்டு சுத்தம் செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
    கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இறுதியில் அனைத்து கோவில்களும் மூடப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து அரசு பல்வேறு தளர்வுகளை கொண்டு வருகிறது. அதில் வருமானம் குறைந்த சிறிய கோவில்கள் அனைத்தும் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் திறக்க அரசு உத்தரவிட்டது. அப்போது பக்தர்கள் அந்த கோவிலுக்குள் எவ்வாறு சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தது. அதன்படி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். இந்த நிலையில் தமிழக அரசு அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று முதல் பொதுமக்களின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

    பல மாதங்களுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட உள்ளதால் கோவில்களை சுத்தம் செய்யும் பணி நேற்று காலை முதல் நடந்தது.

    மீனாட்சி அம்மன் கோவிலில் அனைத்து இடங்களையும் தண்ணீரை கொண்டு சுத்தம் செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். மேலும் அரசு வழிகாட்டுதல்படி பக்தர்கள் இடைவெளி விட்டு சாமி தரிசனம் செய்வதற்காக தரையில் வட்ட வடிவில் குறியீடு வரையப்பட்டு வருகிறது. அனைத்து பக்தர்களும் கோவிலுக்குள் நுழையும் போது கை, கால்களை சுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்களின் தரிசனத்திற்கு மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட மதுரையில் உள்ள அனைத்து பெரிய கோவில்களும் தயார் நிலையில் உள்ளன.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று தூய்மைப்பணி நடைபெற்றது. மேலும் சமூக இடைவெளி கடைபிடிக்கும் விதமாக கோவில் வாசல் முதல் கருவறை வரை சுமார் ஒரு மீட்டர் இடைவெளியில் பெயிண்டு மூலம் டயர்களை பயன்படுத்தி வட்டமிடப்பட்டது. அதில் பக்தர்கள் நின்று சமூக இடைவெளியை கடைபிடித்து ஒவ்வொருவராக வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் ஒவ்வொருவரும் தங்களது கால்களில் அணிந்த காலணிகளை தாங்களாகவே பாதுகாப்பு அறையில் வைத்து தாங்களாகவே எடுத்துச் செல்ல வேண்டும்.

    தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் ஒவ்வொருவரும் கோவிலுக்குள் உள்ள எந்த பொருளையும் தொடக்கூடாது. குறிப்பாக உண்டியலை தொடாமல் சமூக இடைவெளி விட்டு காணிக்கை செலுத்த வேண்டும். சாமி தரிசனம் முடித்துவிட்டு கொடிமரம் அருகே அமரக்கூடாது. மேலும் கொடிமரத்தின் முன் விழுந்து வணங்கக்கூடாது.

    கோவிலின் கருவறையில் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். மற்ற பகுதிக்கு செல்ல அனுமதி கிடையாது. சுவாமி சன்னதியில் விபூதி, குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்படமாட்டாது. வெளிப்பிரகாரத்தில் தட்டில் வைக்கப்படும் பிரசாதத்தை பக்தர்களே எடுத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய நடைமுறையை பக்தர்கள் கடைபிடித்து சாமி தரிசனம் செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளத

    கோரிப்பாளையம் தர்கா கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. மேலும் தர்காவிற்கு வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து தான் வரவேண்டும்.

    மேலும் கை, கால்களை கழுவிய பிறகு தான் தர்காவிற்குள் செல்ல வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று கிறிஸ்தவ ஆலயங்களிலும் சுத்தம் செய்யும் பணி நடந்தது.
    Next Story
    ×