search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோவில்கள் முன்பு பக்தர்கள் வழிபாடு
    X
    கோவில்கள் முன்பு பக்தர்கள் வழிபாடு

    ஆடி மாதம் விடை பெற்றது: கோவில்கள் முன்பு பக்தர்கள் வழிபாடு

    கொரோனா பீதி காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் ஆடி மாதம் வழிபாடு எதிர்பார்த்தபடி அமையவில்லை. ஆனாலும் பக்தர்கள் கோவில்கள் முன்பு நின்று அம்மனை வழிபட்டனர்.
    ஆடி மாதம் என்றாலே அம்மன் வழிபாடு தான் நினைவுக்கு வரும். பிரதான வீதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஆடி மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள் முன்பு பக்தர்கள் கூழ் வார்த்து அதை பொதுமக்களுக்கு வழங்குவார்கள்.

    இந்த ஆண்டு கொரோனா பீதி காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் ஆடி மாதம் வழிபாடு எதிர்பார்த்தபடி அமையவில்லை. ஆனாலும் பக்தர்கள் கோவில்கள் முன்பு நின்று அம்மனை வழிபட்டனர். கோவில் வாசலிலேயே கற்பூரம் ஏற்றியும், மாவிளக்கு படைத்தும், கூழ் வார்த்தும் வழிபட்டு வந்தனர்.

    இந்தநிலையில், ஆடி மாதம் நேற்றுடன் விடை பெற்றது. இதையொட்டி நேற்று தெரு முனைகளில் ஒரு சிலர் கூழ் வார்த்தனர். 
    Next Story
    ×