search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அம்மன் கோவிலில் வழிபாடு
    X
    அம்மன் கோவிலில் வழிபாடு

    ஆடி முதல் வெள்ளிக்கிழமையில் அம்மன் கோவில்களிலும் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை

    வருகிற 17-ந்தேதி ஆடி முதல் வெள்ளிக்கிழமையில் கிராமம் முதல் நகரங்கள் வரை உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தமிழ் மாதங்களில் ஆடி மாதத்திற்கென்று தனி சிறப்பு உண்டு. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். ஆடி மாதத்தின் முதல் மற்றும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் பெண்கள் கூட்டம் அலைமோதும். திருமணமான பெண்கள் தங்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், புத்திர பாக்கியம் வேண்டியும், திருமணம் ஆகாத பெண்கள் தங்களுக்கு திருமண வரம் வேண்டியும் அம்மனை வழிபட்டு வருவர்.

    ஆடி மாதம் அனைத்து வெள்ளிக்கிழமைகளில் அனைத்து கோவில்களில் உள்ள அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் கிராமங்களில் உள்ள கோவில்கள் தவிர அனைத்து கோவில்களிலும் மூடப்பட்டுள்ளன. எனவே வருகிற 17-ந்தேதி ஆடி முதல் வெள்ளிக்கிழமையில் கிராமம் முதல் நகரங்கள் வரை உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×