என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் அனுமதி
Byமாலை மலர்8 Jun 2020 8:09 AM GMT (Updated: 8 Jun 2020 8:09 AM GMT)
திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இதையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கொரோனா தொற்று பரவலை தடுக்க 5-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக இன்று (திங்கட்கிழமை) முதல் மத வழிபாட்டு தலங்களை திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து கோவில் அறங்காவல் குழு நிர்வாகிகள், பள்ளிவாசல், தேவாலயங்களின் பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து அனைத்து வழிப்பாட்டு தலங் களிலும் சமூக இடைவெளியை பக்தர்கள் கடைப்பிடிக்க ஏதுவாக வட்டமிடப்பட்டுள்ளன. அதேபோல் கை, கால்களை கழுவ சோப்பு, தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. வழிபாட்டு தலங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனிபகவான் கோவில் இன்று காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருநள்ளாறு வரும் பக்தர்கள் தங்களது தோஷங்கள் நீங்க, அருகில் உள்ள நளன் குளத்தில் புனித நீராடி, தங்களது உடைகளை குளத்தின் கரையில் விட்டுச்செல்வது வழக்கம்.
ஆனால் கொரோனா தொற்று காரணமாக ஏற்கனவே குளத்தில் புனித நீராட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது நளன் குளத்தை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குளத்தில் உள்ள தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. சனிபகவான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு புனித நீராடுவது குறித்து எந்த தகவலையும் மாவட்ட நிர்வாகம் அறிவிக்கவில்லை.
இதுகுறித்து கோவில் ஊழியர்களிடம் கேட்டபோது, ‘தற்போது நளன் குளம் தூய்மைப்படுத்தும் பணி நடப்பதால் அங்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

Next Story
×