search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி
    X
    வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி

    சோலைமலை முருகன் கோவிலில் வைகாசி திருவிழா தொடக்கம்

    மதுரை அழகர்மலை உச்சியில் முருகப் பெருமானின் 6-ம் படை வீடான சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி மாதம் நடைபெறும் விசாக திருவிழா சண்முகார்ச்சனையுடன் தொடங்கியது.
    மதுரை அழகர்மலை உச்சியில் முருகப் பெருமானின் 6-ம் படை வீடான சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் நடைபெறும் விசாக திருவிழா மிகவும் முக்கியமானதாகும். இந்த திருவிழா நேற்று காலை சண்முகார்ச்சனையுடன் தொடங்கியது.

    தொடர்ந்து மாலையில் மகா தீபாராதனையும், சுவாமி புறப்பாடும் நடந்தது. முன்னதாக வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் மேள தாளம் முழங்க நடந்தது. சோலைமலை முருகன் கோவிலில் தொடர்ந்து 10 நாட்களுக்கு தினமும் காலையிலும், மாலையிலும் பூஜைகள், சுவாமி புறப்பாடு ஆகியவை வழக்கம் போல் நடைபெறும்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வைகாசி விசாகமான ஜூன் 4-ந்தேதி காலை மூலவருக்கு பூஜைகளும், மாலையில் உற்சவர் புறப்பாடும் நடைபெறும். வருகிற 1-ந்தேதி முதல் அரசின் வழிகாட்டுதலின்படி திருவிழா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×