search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவண்ணாமலை
    X
    திருவண்ணாமலை

    முக்தி அருளும் திருவண்ணாமலை

    முக்தி (பிறப்பற்ற நிலை) அருளும் தலங்கள் நான்கு. ஆனால், எவர் ஒருவரும் நினைத்த அளவிலேயே முக்தி அருளும் தலமாக இருப்பது திருவண்ணாமலை.
    முக்தி (பிறப்பற்ற நிலை) அருளும் தலங்கள் நான்கு. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

    திருவாரூரில் பிறக்க முக்தி;

    காசியில் இறக்க முக்தி;

    தில்லைச் சிதம்பரத்தில் தரிசிக்க முக்தி;

    ஆனால், எவர் ஒருவரும் நினைத்த அளவிலேயே முக்தி அருளும் தலமாக இருப்பது திருவண்ணாமலை.

    பஞ்சபூதத்தலங்களில் அக்னித்தலமாக விளங்குகிறது.

    இத்தலத்தில், "அண்ணாமலைக்கு அரோகரா' எனச் சொல்லி சிவபெருமானை வணங்குவர். இதன் பொருள் என்ன தெரியுமா? எல்லாம் வல்ல சிவனின் திருநாமங்களில் "அரன்' என்பதும் ஒன்றாகும்.

    இத்திருப்பெயரினை "அரன், அரன்' என அடுக்குத்தொடர்போல சொன்னார்கள் ஒரு காலத்தில்! அது "அர ஹர அர ஹர'' என்று மாறியது. பின்னர் "அரோஹரா' எனத் திரிந்தது.

    "அரஹர' என்றால் "சிவனே சிவனே' என சிவபெருமானை கூவி அழைப்பதற்கு ஒப்பாகும்.
     
    Next Story
    ×