search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகன்
    X
    முருகன்

    அமாவாசை கோவில்

    சேலத்தில் உள்ள கஞ்சமலையின் குன்றின் மேல் முருகப்பெருமான் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலை ‘அமாவாசை கோவில்’ என்றும் அழைக்கிறார்கள்.
    சேலத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவில். இங்கு காலங்கி சித்தர் வசித்து வந்துள்ளார்.

    இந்தப் பகுதியில் உள்ள சுனை நீரில் குளித்தால் பலவித நோய்கள் குணமாவதாக நம்பிக்கை. உப்பு, மிளகு வாங்கி, கோவில் அருகில் உள்ள கிணற்றில் போட்டால், சரும நோய்கள் நீங்கும் என்றும் சொல்லப்படுகிறது. இங்கு சிறிய குன்றின் மேல் முருகப்பெருமான் கோவில் அமைந்துள்ளது.

    அமாவாசை நாட்களில் இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். எனவே இந்தக் கோவிலை ‘அமாவாசை கோவில்’ என்றும் அழைக்கிறார்கள்.
    Next Story
    ×