என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கள்ளழகர் கோவில் மாசி திருவிழா 8-ந்தேதி தொடங்குகிறது
Byமாலை மலர்2 March 2020 9:02 AM GMT (Updated: 2 March 2020 9:02 AM GMT)
கள்ளழகர் கோவில் மாசி திருவிழாவானது வருகிற 8-ந்தேதி மாலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் சிம்ம லக்கனத்தில் கஜேந்திர மோட்சத்துடன் தொடங்குகிறது.
திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என்று போற்றி புகழ்ந்து அழைக்கப்படுவது மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும்.
இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் மாசி மாதம் நடைபெறும் தெப்ப உற்சவமும் ஒன்றாகும். இந்த விழாவானது வருகிற 8-ந் தேதி மாலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் சிம்ம லக்கனத்தில் கஜேந்திர மோட்சத்துடன் தொடங்குகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் 9-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 6.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் தெப்பத்திற்கு புறப்பாடாகிறார். மேலும் அன்று மண்டூக தீர்த்தம் என்ற பொய்கைகரைப்பட்டி புஸ்கரணிக்கு வழி நெடுகிலும் நின்ற சேவை சாதித்து தொடர்ந்து பொய்கைக் கரைப்பட்டி தெப்பம் போய் சேருகிறார்.
அங்கு பகல் 12 மணிக்கு மேல் 12.30 மணிக்குள் தெப்பத்தின் கிழக்கு புறம் உள்ள மண்டபத்தில் சுவாமி எழுந்தருளுகிறார். அப்போது சுற்று வட்டாரத்தில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். தொடர்ந்து அன்று மாலையில் சுவாமி வந்த வழியாக சென்று கள்ளழகர் கோவிலுக்கு போய் இருப்பிடம் சேருவார். இத்துடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம் நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×