என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பழனி முருகன் கோவிலில் விளக்கு பூஜை
Byமாலை மலர்2 March 2020 6:17 AM GMT (Updated: 2 March 2020 6:17 AM GMT)
பழனி முருகன் கோவிலில், மாசி மாத கார்த்திகை உற்சவத்தையொட்டி பெண்கள் விளக்கு பூஜை செய்து வழிபட்டனர்.
பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கார்த்திகை உற்சவ விழா நடைபெற்று வருகிறது. நேற்று மாசி மாத கார்த்திகை உற்சவத்தையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், தொடர்ந்து 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சன்னியாசி அலங்காரமும், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரமும் நடைபெற்றது.
அதையடுத்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரமும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகாள் அலங்காரமும் நடைபெற்றது. பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் முருகப்பெருமானுக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கார்த்திகை உற்சவத்தையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகம் காணப்பட்டது. மாலை 6 மணிக்கு மேல் மலைக்கோவிலின் தெற்கு வெளிப்பிரகாரத்திலுள்ள திருக்கல்யாண மண்டபத்தில் 108 விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து 6.40 மணிக்கு தங்கமயில் வாகன புறப்பாடு நடந்தது. இதில் சின்னக்குமாரர் உட்பிரகாரத்திலும், 7 மணிக்கு மேல் தங்கரதத்திலும் எழுந்தருளினார். அப்போது சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதையடுத்து தங்கரத புறப்பாடு நடந்தது. நேற்று நடந்த தங்கரத புறப்பாட்டில் 180 பேர் கலந்து கொண்டு தேரை இழுத்தனர்.

Next Story
×