என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தஞ்சை பெரியகோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா
Byமாலை மலர்2 March 2020 5:33 AM GMT (Updated: 2 March 2020 5:33 AM GMT)
தஞ்சை பெரியகோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு 23 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 5-ந் தேதி நடைபெற்றது.
6-ந் தேதி முதல் மண்டலாபிஷேக பூஜை தொடங்கியது. மண்டலாபிஷேகம் வழக்கமாக 48 நாட்கள் நடைபெறும். ஆனால் சித்திரை திருவிழாவுக்காக மண்டலாபிஷேகம் 24 நாட்களாக குறைக்கப்பட்டது. விழா நாட்களில் தினமும் மூலவர் மூர்த்திகளுக்கு பால் மற்றும் எண்ணெய் மட்டுமே கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. மண்டலாபிஷேகம் நேற்றுடன் நிறைவு பெற்றது.
நிறைவுநாளையொட்டி முதல்கால யாகசாலை பூஜை நேற்றுமுன்தினம் மாலை தொடங்கியது. இதற்காக பெரியகோவில் வளாகத்தில் நடராஜர் சன்னதி முன்பு யாகசாலை பந்தல் அமைக்கப்பட்டு பெருவுடையார், பெரியநாயகிஅம்மன், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு தலா ஒரு வேதிகை, ஒரு குண்டம் அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மகாபூர்ணாஹூதி நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது.
நேற்றுஅதிகாலை 5 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் சிவாச்சாரியார்கள் புனிதநீர் அடங்கிய கடங்களுடன் பிரகாரத்தை சுற்றி வந்தனர். தொடர்ந்து 8.30 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகிஅம்மன் உள்பட மூலவர் மூர்த்திகளுக்கு பால்அபிஷேகம் செய்யப்பட்டு, கடத்தில் கொண்டு வரப்பட்ட புனிதநீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, சதயவிழாக்குழு தலைவர் துரை.திருஞானம், முன்னாள் மாநகராட்சி மேயர் சாவித்திரிகோபால், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கிருஷ்ணன், கோவில் நிர்வாக அலுவலர் மாதவன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று மண்டலாபிஷேகம் நிறைவு நாள் என்பதாலும், விடுமுறை தினம் என்பதாலும் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகஅளவில் இருந்தது.
24 நாட்களில் மண்டலாபிஷேகம் நிறைவு பெற்றாலும் மீதி உள்ள 24 நாட்களும் மூலவர் மூர்த்திகளுக்கு பால் மற்றும் எண்ணெய் மட்டுமே கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பூக்களால் அலங்காரம் செய்யப்படும் என சிவாச்சாரியார் தெரிவித்தார்.
மண்டலாபிஷேக நிறைவு விழாவையொட்டி தஞ்சை துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் கோவில் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story
×