search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பக்தர்களின் வசதிக்காக தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    பக்தர்களின் வசதிக்காக தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    தஞ்சை பெரியகோவிலில் தரைவிரிப்புகள்

    வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தஞ்சை பெரியகோவிலில் தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    மாமன்னன் ராஜராஜசோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் இன்றைக்கும் தமிழர்களின் பெருமைகளை பறைசாற்றி கொண்டு இருக்கிறது. கட்டிட கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

    இங்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மன், மராட்டா விநாயகர், முருகன், சண்டீகேஸ்வரர், வராகி, தட்சிணாமூர்த்தி, நடராஜர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    கடந்த 5-ந் தேதி கும்பாபிஷேகம் முடிந்து மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். விடுமுறை நாளில் 1 லட்சம் பேர் வரை தரிசனம் செய்கின்றனர். தஞ்சையில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பெரியகோவிலுக்கு வரும் பக்தர்கள் நடந்து செல்லும்போது வெயிலின் தாக்கத்தினால் சூடு தாங்க முடியாமல் ஓடக்கூடிய நிலை உள்ளது. இதனால் தரைவிரிப்புகள் விரிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

    இந்த கோரிக்கையை ஏற்று கோவில் நிர்வாகத்தின் சார்பில் தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டுள்ளன. கோவிலை சுற்றிலும் தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் அதன் வழியாக நடந்து செல்கின்றனர். நடராஜர் சன்னதி, அம்மன் சன்னதி அருகே தரைவிரிப்பு விரிக்கப்படாமல் கொஞ்சம் இடைவெளி இருக்கிறது. அந்த இடத்திலும் தரைவிரிப்புகளை விரிக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    Next Story
    ×