search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நத்தம் மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய காட்சி
    X
    நத்தம் மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய காட்சி

    நத்தம் மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா

    நத்தம் மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் (மார்ச்) 10-ந்தேதி நடைபெற உள்ளது.
    நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதையொட்டி காலையில் 9.35 மணிக்கு மேள தாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சிறப்பு பூஜைகள் நடத்தி, கோவில் முன் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

    இதில் கொடிமரம், நாணல், மாவிலை, வண்ண பூமாலைகள் இணைத்து மாரியம்மன் உருவம் பொறித்த கொடிமரத்திற்கு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து மூலவர் மாரியம்மன், வெள்ளி மயில் வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவில் கோவில் செயல் அலுவலர் பாலசரவணன், கூட்டுறவு பால்பண்ணை தலைவர்கள் சக்திவேல், சிவலிங்கம், பேரூராட்சி செயல் அலுவலர் சரவணக்குமார், துப்புரவு ஆய்வாளர் சடகோபி, கோவில் பூசாரிகள், விழாக்குழுவினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

    2-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில், நத்தம் அருகே உள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி தீர்த்தம் எடுத்து வந்து சந்தன கருப்பசுவாமி கோவிலில் பக்தர்கள் ஒன்று கூடுவர். அங்கிருந்து பக்தர்கள் ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு வருகை தருவர். பின்னர் மஞ்சள் காப்பு கட்டி 15 நாட்கள் விரதம் தொடங்குவார்கள். இதைத்தொடர்ந்து தினமும் திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் (மார்ச்) 10-ந்தேதி நடைபெற உள்ளது.
    Next Story
    ×