search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவொற்றியூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை
    X
    திருவொற்றியூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை

    திருவொற்றியூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை

    எண்ணூர் விரைவு சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
    மாசி மாத மகா சிவராத்திரியை அடுத்த அமாவாசை நாளில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அப்போது அனைத்து அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்களிலும் உடுக்கை, பம்பை, சிலம்பாட்டத்துடன் அம்மன் வேடமிட்டு உக்கிரகமாக ஆடி ஊர்வலமாக சென்று சூறையாடுவதை ஐதீகமாக கொண்டாடி வருகிறார்கள்.

    சிவபெருமான் தன் சக்தியை இழந்து பல சோதனைகளுக்கு ஆளானபோது பார்வதி, அங்காள பரமேஸ்வரியாக உருவெடுத்து 18 பரிவாரங்களுடன் சென்று மயானத்தில் வைத்து அசுரனை வதம் செய்ததே மயான கொள்ளை நிகழ்ச்சியாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    அதன்படி எண்ணூர் விரைவு சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலும் நேற்று மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கோவில் வாசலில் அனைத்து காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்களால் அசுரன் உருவம் செய்து வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் அம்மன் வேடமிட்டு வந்த பக்தர்கள், ஆவேசத்துடன் ஓடி வந்து, அசுரனை வதம் செய்து காய்கறி, பழங்கள், பருப்புகளை சூறையாடினர். இந்த நிகழ்ச்சியில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×