search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விளக்குகளில் எத்தனை பொட்டுகள் வைக்கவேண்டும்?
    X
    விளக்குகளில் எத்தனை பொட்டுகள் வைக்கவேண்டும்?

    விளக்குகளில் எத்தனை பொட்டுகள் வைக்கவேண்டும்?

    நாம் குடியிருக்கும் வீட்டில் ஆத்மார்த்தமாக தினசரி விளக்கேற்றி வழிபாடு செய்து வர வீட்டில் அமைதியும், இன்பமும் பெருகும். பழக்க வழக்கங்களை நாம் மாற்றிக் கொள்வதால் தான் பிரச்சினைகள் தலை தூக்குகின்றன.
    இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் தினசரி வீட்டில் விளக்கு ஏற்றுவது என்பதே பலர் கடமைக்காக செய்கின்றனர். நாம் குடியிருக்கும் வீட்டில் ஆத்மார்த்தமாக தினசரி விளக்கேற்றி வழிபாடு செய்து வர வீட்டில் அமைதியும், இன்பமும் பெருகும். பழக்க வழக்கங்களை நாம் மாற்றிக் கொள்வதால் தான் பிரச்சினைகள் தலை தூக்குகின்றன.

    தினசரி வீட்டில் விளக்கேற்றுவதால் ஐஸ்வர்யம் பெருகி லட்சுமி கடாட்சம் உண்டாகும். விளக்கு ஏற்றப்படுவதற்கு முன் விளக்கை கழுவி சுத்தம் செய்து ஈரம் போக துணி கொண்டு துடைத்து விட்டு சந்தனம் அதன் மேல் பொட்டு வைப்பதே ஆகம விதி. மஞ்சளைக் காட்டிலும் சந்தனம் சக்தி வாய்ந்தது. குத்து விளக்கில் மொத்தம் எட்டு இடங்களில் பொட்டு வைக்க வேண்டும்.

    விளக்கின் மேல்பாகத்தில் ஒன்றும், விளக்கின் முகங்களில் ஐந்தும், விளக்கின் ஸ்தம்பத்தில் ஒன்றும், விளக்கின் பாதத்தில் ஒன்றும் ஆக எட்டு என்ற எண்ணிக்கையில் பொட்டிட வேண்டும். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களையும், சூரிய, சந்திர மற்றும் உயிர் சக்தி என எட்டு அல்லது மகாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, தைரிய லட்சுமி, ஜெயலட்சுமி, வித்யாலட்சுமி ஆகிய அஷ்டலட்சுமிகளையும் விளக்கில் வழிபாடு செய்யலாம்.

    இந்த அடிப்படையில் பொட்டிட்டு வழிபாடு செய்து வர வீட்டில் சகல சௌபாக்கியங்களும் பெருகும் என்பது ஆன்றோர் வாக்கு.
    Next Story
    ×