search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவன் அபிஷேகம்
    X
    சிவன் அபிஷேகம்

    சிவராத்திரி: 3 ஆயிரம் சிவன் கோவில்களுக்கு 40 ஆயிரம் லிட்டர் கங்கை புனித நீர்

    சிவராத்திரியை முன்னிட்டு அபிசே‌ஷகத்திற்காக 40 ஆயிரம் லிட்டர் கங்கை நீர், ஹரித்துவார் பிரம்மா குண்டா பகுதியில் இருந்து பெங்களுருவுக்கு எடுத்து வரப்பட்டு 3 ஆயிரம் பழமை வாய்ந்த சிவன் கோவில்களுக்கு வழங்கப்பட்டது.
    கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா நாளை இரவு கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட உள்ளது.

    இந்த அபிசே‌ஷகத்திற்காக 40 ஆயிரம் லிட்டர் கங்கை நீர், ஹரித்துவார் பிரம்மா குண்டா பகுதியில் இருந்து பெங்களுருவுக்கு எடுத்து வரப்பட்டுள்ளது. இந்த புனித நீர் கேன்களில் அடைத்து 3 ஆயிரம் பழமை வாய்ந்த சிவன் கோவில்களுக்கு வழங்கப்பட்டது.

    புனித நீரை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு மகரிஷி ஆனந்த் குருஜி சிறப்பு பூஜை செய்தார். 12-வது ஆண்டாக இந்த புனித நீர் வழங்கும் பணிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மந்திரி கிருஷ்ணய்யா செட்டி செய்திருந்தார்.

    கங்கை நீர் சிவனுக்கு பிடித்தமானது என்றும், அந்த நீரை கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்வதன் மூலம் நாட்டு மக்களுக்கு நன்மை உண்டாகும் என்றும் மகரிஷி ஆனந்த் குருஜி கூறினார். 
    Next Story
    ×