search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வெயிலுகந்தம்மன் கோவில் மாசி திருவிழாவில் கொடிமரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்ட போது எடுத்த படம்.
    X
    வெயிலுகந்தம்மன் கோவில் மாசி திருவிழாவில் கொடிமரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்ட போது எடுத்த படம்.

    வெயிலுகந்தம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றம்

    திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தரிசனம் செய்தனர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோவிலில் மாசி திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அதிகாலை 5.10 மணிக்கு கொடிமரத்தில் காப்பு கட்டிய த.அசோகன் வல்லவராயர் திருவிழா கொடியினை ஏற்றினார். அதன்பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடைபெற்றது.

    திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் ராமசுப்பிரமணியன், கோவில் அலுவலர்கள் பிச்சையா, சிவா, மணியம் நெல்லையப்பன், ஓய்வுபெற்ற கால்நடை துறை உதவி இயக்குனரும் தக்கார் பிரதிநிதியுமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், கோவில் பணியாளர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தரிசனம் செய்தனர்.

    திருவிழா நாட்களில் தினமும் அம்மன் ஒவ்வொரு வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 10-ம் திருநாளான வருகிற 25-ந் தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது.

    திருவிழா ஏற்பாடுகளை தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் அம்ரித் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
    Next Story
    ×