search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நெல்லையப்பர் கோவில்
    X
    நெல்லையப்பர் கோவில்

    நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் தைப்பூச திருவிழா நாளை மறுநாள்(வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் தைப்பூச திருவிழா நாளை மறுநாள்(வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்று அதிகாலை 5 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. காலை 7-30 மணிக்கு கொடியேற்றமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.

    வருகிற 4-ந்தேதி மதியம் 12 மணிக்கு நெல்லுக்கு வேலியிட்ட திருவிழாவும், இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் வீதி உலாவும் நடக்கிறது.

    8-ந்தேதி தைப்பூச திருவிழாவன்று மதியம் 12 மணிக்கு சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், அகஸ்தியர், தாமிரபரணி, குங்களியநாயனார், சண்டிகேசுவரர், அஸ்திரதேவர், அஸ்திரதேவி ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கோவிலில் இருந்த புறப்பட்டு நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தாமிரபரணி ஆற்றில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்கள்.

    மாலை 4 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரியும், இதைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு தைப்பூச மண்டபத்தில் இருந்த புறப்பட்டு கோவிலை சென்றடைகிறார்கள். அங்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

    9-ந்தேதி சவுந்திர சபா மண்டபத்தில் வைத்து பிருங்கி ரத முனி சிரேஷ்டர்களுக்கு திருநடனம் காட்டியருளும் சவுந்திரசபா நடராஜர் திரு நடன காட்சியும், 10-ந்தேதி இரவு 7 மணிக்கு புஷ்கரணி என்கிற வெளித்தெப்பத்தில் தெப்ப திருவிழாவும் நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் யக்ஞ நாராணயன் மற்றும்பணியாளர்கள் செய்து உள்ளனர்.
    Next Story
    ×