search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சனி பகவான்
    X
    சனி பகவான்

    சனிப்பெயர்ச்சி பலன்கள்

    திருக்கணிதப் பஞ்சாங்கப்படி தனுசு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சனிபகவான் 24.1.2020 அன்று மகர ராசிக்குச் செல்கின்றார். அங்கு 16.1.2023 வரை இருக்கின்றார் என்று குறிப்பிட்டுள்ளனர்.
    ஜோதிட சாஸ்திர அமைப்பில் திருக்கணிதம், வாக்கிய கணிதம் என்று இரண்டு வகை உண்டு. சிலர் திருக்கணித பஞ்சாங்க ரீதியாக ஜாதகம் கணித்துப் பலன் அறிந்து கொள்வர். சிலர் வாக்கிய கணித பஞ்சாங்க ரீதியாக ஜாதகம் கணித்து பலன் அறிந்து கொள்வர். பொதுவாகவே நமக்கு ‘சாதகமான நேரமா’ என்பதை அறிந்து கொள்ள உதவுவதே ‘ஜாதகம்’ ஆகும்.

    திருக்கணிதப் பஞ்சாங்கப்படி தனுசு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சனிபகவான் 24.1.2020 அன்று மகர ராசிக்குச் செல்கின்றார். அங்கு 16.1.2023 வரை இருக்கின்றார் என்று குறிப்பிட்டுள்ளனர்.

    ஆனால் வாக்கிய கணிதப் பஞ்சாங்கப்படி 28.3.2020 அன்று வக்ர கதியில் சனிபகவான் மகர ராசிக்கு செல்கின்றார். அங்கு 15.6.2020 வரை வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். மீண்டும் 16.6.2020 முதல் 14.9.2020 வரை தனுசு ராசியில் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். அதன்பிறகு வக்ர நிவர்த்தியாகி தனுசு ராயிலேயே இருந்து முறைப்படி 26.12.2020-ல் தன் சொந்த வீடான மகர ராசிக்குச் செல்கின்றார்.

    திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 24.1.2020-ல் மகர ராசிக்குச் சென்ற சனிபகவான் 11.5.2020 முதல் 29.9.2020 வரை மகரத்தில் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். பிறகு 23.5.2021 முதல் 11.10.2021 வரை மீண்டும் மகரத்தில் வக்ரம்பெறுகின்றார். 26.4.2022 முதல் 14.7.2022 வரை கும்ப ராசியில் சனி சஞ்சரிக்கின்றார். மீண்டும் 15.7.2022 முதல் மகரத்திற்கு பின்னோக்கி வருகின்றார். அங்கு 23.10.2022 வரை வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். அங்கேயே இருந்து தனது 3,7,10 ஆகிய பார்வையால் கடகம், துலாம், மீனம் ஆகிய ராசிகளைப் பார்க்கின்றார். பிறகு 17.1.2023-ல் கும்ப ராசிக்கு முறைப்படி செல்கின்றார். இது திருகணிதப் படியான சனியின் சஞ்சாரமாகும்.

    திருக்கணிதப்படி நடைபெறும் சனிப் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்கு அஷ்டமத்துச் சனி விலகுகிறது. மிதுன ராசிக்கு கண்டகச் சனி விலகுகின்றது. கன்னி ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனி விலகுகின்றது. விருச்சிக ராசிக்கு ஏழரைச் சனி விலகுகின்றது. இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் மிகுந்த நற்பலன்களை பெறும் ராசிகள்: ரிஷபம், கன்னி, விருச்சிகம். இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டது துலங்கும், நன்மைகள் அதிகம் நடைபெறும்.

    திருக்கணிதப்படி நடைபெறும் சனிப் பெயர்ச்சியின்படி மிதுன ராசிக்கு கண்டகச் சனி விலகி அஷ்டமத்துச் சனி தொடங்குகின்றது. கடக ராசிக்கு கண்டகச் சனி தொடங்குகின்றது.

    துலாம் ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனி தொடங்குகின்றது. தனுசு ராசிக்கு ஜென்மச் சனி விலகி குடும்பச்சனியாக ஏழரைச் சனி நடைபெறுகின்றது. மகர ராசிக்கு ஜென்மச் சனியாக ஏழரைச்சனி வருகின்றது. கும்ப ராசிக்கு இனி ஏழரைச் சனி தொடங்கு கின்றது.

    மேற்கண்ட மிதுனம், கடகம், துலாம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிகள் கவனத்துடன் செயல்பட வேண்டிய நேரமாகும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படாதிருக்க வழிபாடுகள் கைகொடுக்கும்.

    ஆக மிதுனம், கடகம், துலாம், தனுசு, மகரம், கும்ப ராசிக்காரர்கள் சனியின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு நல்ல யோகபலன்களைப் பெற சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுவது நல்லது. நீதியின் சின்னமாக தராசு சின்னம் இடம்பெற்ற துலாம் ராசியில் உச்சம் பெறுபவர் சனி. எனவே நீதிமான், நியாயவான் என்றெல்லாம் புகழப்படுபவர், போற்றப்படுபவர். ஆகையால் சனியைத் தீயகிரகம் என்று கருதக்கூடாது. `சனி தாக்கும் கிரகமல்ல, காக்கும் கிரகம்’ என்பதை அனுபவத்தில் அறிந்து கொள்ளலாம்.

    ‘கருநிறக் காகம் ஏறி காசினி தன்னைக் காக்கும் ஒரு பெரும் கிரகமான ஒப்பற்ற சனியே’ எனத் தொடங்கும் சனிகவசத்தை பாராயணம் செய்து சனீஸ்வர வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமும், சனிக்குரிய வாகனமான காகத்திற்கு எள் கலந்த அன்னம் வைத்து ஆதரிப்பதன் மூலமும், வஸ்திரதானம், அன்னதானம் போன்ற கைங்கர்யங்களை செய்வதன் மூலமும் சனியின் அருளுக்குப் பாத்திரமாகி நல்லவாழ்வை அமைத்துக் கொள்ள இயலும்.

    மேலும் அனைத்து ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்...https://www.maalaimalar.com/devotional/astrology
    Next Story
    ×