
இதன் நிறைவு விழா மற்றும் யானை மீது சந்தனகுட ஊர்வலம் புதன்கிழமை நடந்தது. இன்று காலை 8.30 மணிக்கு லட்சுமிபுரம் மவுன குருசாமி சமாதி பீடத்தில் இருந்து சந்தனகுட ஊர்வலம் புறப்பட்டு கருமன்கூடல் விலக்கு, பருத்திவிளை, நடுவூர்கரை திருப்பு, செக்காரவிளை வழியாக மண்டைக்காடு கோவிலை வந்தடைகிறது.
நிகழ்ச்சிக்கு சங்க கவுரவ ஆலோசகர் காளிப்பிள்ளை தலைமை தாங்குகிறார். மாவட்ட இந்து முன்னணி தலைவர் மிசாசோமன் முன்னிலை வகிக்கிறார். ஊர்வலத்தை வெள்ளிமலை விவேகானந்த ஆஸ்ரம தலைவர் சைதன்யானந்த மகராஜ் தொடங்கி வைக்கிறார். பகல் 11 மணிக்கு மண்டலகால நிறைவு விழா நடக்கிறது.