search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுவாமிமலை முருகன் கோவில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    சுவாமிமலை முருகன் கோவில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    சுவாமிமலை முருகன் கோவில் தேரோட்டம்

    சுவாமிமலை முருகன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
    முருகனின் அறுபடை வீடுகளில் 4-வது படைவீடாக சுவாமிமலை முருகன் கோவில் திகழ்கிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கடந்த 2-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் கார்த்திகை விழா தொடங்கியது. பின்னர் சுப்பிரமணிய சாமி பரிவாரங்களுடன் மலைக்கோவிலில் இருந்து உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார்,.

    தொடர்ந்து 9 நாட்கள் பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று காலை 8.30 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தொடர்ந்து இரவு 9 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சாமி வீதியுலாவும், இரவு 11 மணிக்கு திருக்கார்த்திகை தீபக்காட்சியும் நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) காலை படிச்சட்டத்தில் வீதியுலாவும், காவிரியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜீவானந்தம் (கூடுதல் பொறுப்பு), இணை ஆணையர் செல்வராஜ், கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
    Next Story
    ×