
இங்கு முருகன் சிவகுருநாதனாக அருள்பாலித்து வருகிறார். பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருக்கார்த்திகை திருவிழா வருகிற 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
முன்னதாக 1-ந் தேதி விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜைகள் நடக்கின்றன. 2-ந் தேதி கொடியேற்றத்தையொட்டி சுப்பிரமணியசுவாமி பரிவாரங்களுடன் மலை கோவிலில் இருந்து உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். 3-ந் தேதி படி சட்டத்தில் சாமி வீதி உலா, நடக்கிறது. அதைத்தொடர்ந்து விழா நாட்களில் பல்லக்கு, பூத கணம், ஆட்டுக்கிடா, வெள்ளி மயில், யானை, காமதேனு, வெள்ளி குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சாமி புறப்பாடு நடக்கிறது.
10-ந் தேதி திருக்கார்த்திகை அன்று தேரோட்டம் நடக்கிறது. 11-ந் தேதி காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. 12-ந் தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.