
முன்னதாக அதிகாலையில் கோவில் நடைதிறக்கப்பட்டு, கோபூஜை, தோமாலை சேவை ஆகியவை நடைபெற்றது. பின்னர் மூலவர் சரநாராயண பெருமாள் பண்டரிபுரம் பாண்டுரங்க அலங்காரத்தில் அருள்பாலித்தார். மேலும் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சரநாராயண பெருமாள் கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.