search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குங்குமம் வைக்கும் முறை
    X
    குங்குமம் வைக்கும் முறை

    குங்குமம் வைக்கும் முறை

    குங்குமம் லட்சுமி கடாட்சம் மிக்கது. குங்குமம் வைக்கும் போது சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அது என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    குங்குமம் லட்சுமி கடாட்சம் மிக்கது. பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள்.

    குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது.

    மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் ஸ்ரீ லக்ஷ்மிதேவி உறைகின்றாள். இந்த மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது.

    கோயிலில் குங்குமத்தைப் பெறுகையில் வளையல்கள் அணிந்த வலக்கையில் வாங்கி அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு வைத்துக் கொள்ள வேண்டும்.
    Next Story
    ×