search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சோலைமலை முருகன் கோவில்
    X
    சோலைமலை முருகன் கோவில்

    சோலைமலை முருகன் கோவிலில் கார்த்திகை விழா தொடங்கியது

    அழகர்கோவில் மலையில் உள்ள சோலைமலை முருகன் கோவிலில் கார்த்திகை விழா முதல் சோமவாரத்துடன் தொடங்கியது.
    அழகர்மலை உச்சியில் உள்ள சோலைமலை முருகன்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் கார்த்திகை மாதம் நடைபெறும் விழா சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு கார்த்திகை விழா சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. விழாவையொட்டி கடந்த 17-ந்தேதி முருக, அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். நேற்று கார்த்திகை முதல் சோமவாரத்தை வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மேளதாளம் முழங்க சாமி புறப்பாடு நடந்தது.

    வருகிற 25-ந்தேதி 2-வது சோமவாரத்தையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், சாமி புறப்பாடு நடக்கிறது. அடுத்த மாதம் 2,9-ந்தேதி சோமவார சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    முக்கிய விழாவாக அடுத்த மாதம் 10-ந்தேதி மாலை 4 மணிக்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அன்று மாலை 6 மணிக்கு திருகார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு கோவில் முன்பு சொக்கப்பனை ஏற்றப்படுகிறது. 16-ந்தேதி 5-வது சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், சாமி புறப்பாடு, மாலை சஷ்டிமண்டப வளாகத்தில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. இத்துடன் கார்த்திகை மாத விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×