search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஐயா வழி பக்தர்கள் பாதயாத்திரை
    X
    ஐயா வழி பக்தர்கள் பாதயாத்திரை

    சாமிதோப்பில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ஐயா வழி பக்தர்கள் பாதயாத்திரை

    சாமிதோப்பில் இருந்து திருவனந்தபுரம் சிங்காரத்தோப்பு பதிக்கு ஐயா வழி பக்தர்கள் பாதயாத்திரை தொடங்கினர்.
    சாமிதோப்பில் இருந்து திருவனந்தபுரம் சிங்காரத்தோப்பு பதிக்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 1-ந் தேதி ஐயா வழி பக்தர்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஐயா வைகுண்டர் மகா பாதயாத்திரை நேற்று காலையில் தொடங்கியது.

    இதன் தொடக்க நிகழ்ச்சி சாமிதோப்பு அன்புவனத்தில் நடந்தது. பாலபிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கி பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், கேரள நாடார் மகா ஜன சங்க தலைவர் அகிமோகனன், முன்னாள் சாமிதோப்பு ஊராட்சி மன்ற தலைவர் தியாகராஜன், பொள்ளாச்சி செல்வராஜ், ரெத்தினமணி, பொன் செல்வராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பாதயாத்திரை நேற்று இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் மண்டபத்தை சென்றடைந்தது. இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு நாகராஜா கோவிலில் இருந்து பாதயாத்திரை தொடங்குகிறது. தொடர்ந்து தக்கலை, மார்த்தாண்டம், களியக்காவிளை, பாறசாலை, நெய்யாற்றின்கரை வழியாக வருகிற 22-ந் தேதி திருவனந்தபுரம் சிங்காரதோப்பு பதியை அடைகிறது.

    அங்கு ஐயாவுக்கு சிறப்பு பணிவிடை, சிறப்பு வழிபாடுகள், கருத்தரங்கம், சமய நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை ஐயா வைகுண்டர் மகா பாதயாத்திரை நிர்வாகிகள் செய்துள்ளனர். 
    Next Story
    ×