
இங்கும் பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு நகரின் மையப் பகுதியில் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இந்த நிலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும்.
கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தீப விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று கார்த்திகை மாத பிறப்பையொட்டியும், விடுமுறை நாள் என்பதாலும் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வந்திருந்தனர். பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் வழியிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் கார்த்திகை மாத பிறப்பையொட்டி நகரில் பல்வேறு கோவில்களில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.