search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தெய்வி முருகன்
    X
    தெய்வி முருகன்

    பெருவிளை தெய்வி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா 28-ந்தேதி தொடங்குகிறது

    நாகர்கோவில் அருகே பெருவிளை தெய்வி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா 28-ந் தேதி தொடங்கி 7 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் அருகே பெருவிளை தெய்வி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா வருகிற 28-ந்தேதி தொடங்கி 7 நாட்கள் நடக்கிறது.

    விழாவில் முதல்நாள் அதிகாலை 5 மணிக்கு புனித நீர் தெளித்தல், கணபதிேஹாமம், காலை 6.40 மணிக்கு காப்புக்கட்டுதல், மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 7.30 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் வெள்ளிமலை தர்ம வித்யா பீட சைதன்யானந்த மகராஜ் கலந்து கொண்டு பொன்விழா சிறப்பு மலரை வெளியிடுகிறார். அதை பேயோடு யோகிராம் சுரத்குமார் ஆனந்த குருகுலம் பாலகிருஷ்ணன் பெற்றுக்கொள்கிறார். 10 மணிக்கு தீபாராதனை நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் தினமும் காலை 6.30 மணிக்கு உதயகால பூஜை, மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    வருகிற 29-ந்தேதி இரவு 7 மணிக்கு சுமங்கலி பூஜை, 1-ந்ேததி இரவு 7 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை, 2-ந்தேதி காலை 11 மணிக்கு கும்பாபிஷேகம், மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம், 3-ந்தேதி காலை 8 மணிக்கு பொங்கல் வழிபாடு, மதியம் 12 மணிக்கு திருக்கல்யாணம், 1 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு புஷ்பாபிஷேகம், இரவு 7 மணிக்கு பரிசு வழங்குதல், 8.30 மணிக்கு தீபாராதனை ஆகியவை நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை தெய்வி முருகன் கோவில் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×