search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில்
    X
    தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில்

    தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்

    தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று தொடங்கியது. அதிகாலை 5.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன், திருவிளக்கு பூஜை கமிட்டி ஒருங்கிணைப்பாளர் அன்னையா பாண்டியன், அய்யப்ப சேவா சங்க நிர்வாகி சுப்பாராஜ் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழா வருகிற 25-ந் தேதி வரை நடைபெறுகிறது. 23-ந் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 25-ந் தேதி இரவு 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. தினமும் இரவு 8 மணிக்கு மண்டகப்படி தீபாராதனை நடக்கிறது. பின்னர் வீதி உலாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி, தக்கார் சங்கர், கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன், கோவில் ஆய்வாளர் கலாமணி ஆகியோர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×