என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று தொடங்குகிறது
Byமாலை மலர்15 Oct 2019 6:24 AM GMT (Updated: 15 Oct 2019 6:24 AM GMT)
நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜை, வீதி உலா நடக்கிறது. 4-ம் திருவிழாவான வருகிற 18-ந் தேதி காலை 8 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட காமதேனு வாகனத்தில் காந்திமதி அம்மன் வீதி உலா வருதல் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதிஉலா வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
7-ந் திருவிழாவான 21-ந் தேதி காலை 8 மணிக்கு அம்பாள் தந்த பல்லக்கு வாகனத்தில் தவழ்ந்த திருக்கோலத்திலும், இரவு 8 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்திலும் வீதி உலா வருதல், 22-ந்தேதி காலை 8 மணிக்கு அம்பாள் வெள்ளி சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா வருதலும், இரவு 8 மணிக்கு கிளி வாகனத்திலும் வீதி உலா வருதல் நிகழ்ச்சியும் நடக்கின்றது.
23-ந்தேதி காலை 8 மணிக்கு அம்பாள், செப்பு தேரில் பவனியும், இரவு 8 மணிக்கு தந்தப்பல்லக்கில் வீதி உலா வருதல், 24-ந்தேதி காலை 8 மணிக்கு அம்பாளுக்கு தங்க பல்லக்கில் தீர்த்தவாரியும், இரவு 9 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், நள்ளிரவு 1 மணிக்கு அம்மாள் தவக்கோலத்துடன் தங்கசப்பரத்தில் கம்பை நதிக்கு எழுந்தருளுகிறார்.
25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் அம்பாளுக்கு காட்சி கொடுக்க கோவிலில் இருந்து எழுந்தருளலும், 12 மணிக்கு காந்திமதி அம்பாளுக்கு காட்சி மண்டபத்தில் வைத்து சுவாமி நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் காட்சி கொடுக்கும் வைபவமும், மாலை மாற்றும் வைபவமும் நடக்கிறது.
26-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம், காலை 9.30 மணிக்கு சுவாமி-அம்பாள் பூம்பல்லக்கில் பட்டணப்பிரவேசம் வீதிஉலா, 26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஊஞ்சல் திருவிழா நடக்கிறது. 29-ந் தேதி இரவு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டணப்பிரவேசம் வீதிஉலா நடக்கிறது.

Next Story
×