search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அய்யா வைகுண்டர்
    X
    அய்யா வைகுண்டர்

    மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி திருவிழா இன்று தொடங்கியது

    மணலி புதுநகர் வைகுண்டபுரத்தில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி, 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
    மணலி புதுநகர் வைகுண்டபுரத்தில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.  இந்த திருவிழா 13-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

    திருவிழாவையொட்டி தினமும் திருஏடுவாசிப்பு, பணிவிடை உச்சிப்படிப்பு, உகப்படிப்பு நடைபெறும். விழா நடைபெறும் நாட்களில் அய்யா முதல்நாள் அலங்கரிக்கப்பட்ட காளை வாகனத்திலும், தொடர்ந்து அன்னம், செண்டை மேளத்துடன் கருடன், மயில், ஆஞ்சநேயர், சர்ப்பம், மலர்முகம், சிம்மம், குதிரை, காமதேனு, பூம்பல்லக்கு உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    விழாவின் முக்கிய நிகழ்வாக 10-ம் நாள்(ஞாயிற்றுக்கிழமை) காலை 11.30 மணி அளவில் அய்யா அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் வீதிவலம் வருவார். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து அய்யா வழி பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொள்வார்கள். விழா நடைபெறும் நாட்களில் பக்தர்களுக்கு மூன்று வேளையும் கோவில் நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து உள்ளனர்.
    Next Story
    ×