
இந்த பதியில் பங்குனி திருவிழாவின் போது வைகுண்டசாமி தேரில் பவனி வருவதற்கு தேர் இல்லாமல் இருப்பது பெரும் குறையாக இருந்தது. இதனையடுத்து புதிய தேர் செய்ய முடிவு செய்யப்பட்டது. தேக்குமரம் மூலம் ரூ.1 கோடி செலவில் தேர் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தேர் 27 அடி உயரத்திலும் 19 அடிநீளம் மற்றும் 10 அடி அகலத்திலும் செய்யப்பட்டு வருகிறது. இந்த தேரின் மொத்த எடை 20 டன் ஆகும்.
வருகிற மார்ச் மாதத்திற்குள் தேர் செய்யும் பணி முடிக்கப்பட்டு பங்குனி திருவிழாவின் 11-ம் நாள் திருவிழா அன்று கோவிலை சுற்றி பவனி வர உள்ளது.